தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு போயர் தெருவை சேர்ந்தவர் முனியப்பன். இவருடைய மகன் அசோக்குமார் 23. இவர் பாலக்கோட்டில் ஒரு எலக்ட்ரிக் கடையில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் மற்றொரு கடையில் ஒரு இளம்பெண் வேலை பார்த்து வந்தாள். இரண்டு பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப் பெண்ணை அசோக் குமார் ஒரு தலையாக காதலித்து வந்தார். இந்த நிலையில் அசோக்குமார் ஒருதலையாக காதலித்த பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். பின்னர் அந்தப் பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. காதலித்த பெண்ணுக்கு மற்றொருவருடன் திருமணம் நடந்ததால் அசோக்குமார் மனவேதனையில் இருந்துவந்தார். இந்த நிலையில் கடந்த 2ம் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவருடைய குடும்பத்தினர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அசோக்குமார் நேற்று முன்தினம் இரவு இருந்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒருதலைக் காதலால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
எழுதியவர்: mohan October 11, 2019, 2:24 pm



You must be logged in to post a comment.