மதுரை மாவட்டம் . T.கல்லுப்பட்டி சரகம் நாகையாபுரம் தொட்டியபட்டி அருகே விஜய காண்டீபன் ஆய்வாளர்தலைமையில், போலீசார் ரோந்து சென்றபோது,
தொட்டியபட்டி அருகே கையில் பையுடன் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்த போது கமலகண்ணன் (40) பையில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துவருவது தெரியவந்தது. அவரிடமிருந்து 190 பாட்டில்கள் பறிமுதல் செய்தும், மேலும் அதே ஊரில் நடுத்தெருவில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஆறுமுகம் (35) துரைப்பாண்டி (30) என்பவர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்களும் சட்டவிரோதமாக மதுபானம் விற்றது தெரியவந்தது மேற்படி நபர்களின் வீட்டின் மாட்டுக் கொட்டத்தில் சென்று அங்கே 188 பாட்டிலை பறிமுதல் செய்தும் , மேற்படி போலி மதுபானம் விற்பனை செய்த நபர்களை கைது செய்தும், நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்



You must be logged in to post a comment.