17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நயினார்கோவில் அருகே மழை, உலக நன்மை வேண்டி முளைப்பாரி விழா

நயினார்கோவில் அருகே மழை, உலக நன்மை வேண்டி முளைப்பாரி விழா

எழுதியவர்: mohan October 10, 2019, 9:59 am

இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே தியாகவன்சேரி முத்து மாரியம்மன் கோயில் 13 ஆம் ஆண்டு முளைப்பாரி விழா அக்.1 ஆம் தேதி காப்பு உடன் தொடங்கியது. மாப்பிள்ளைச்சாமி, சாத்தையா, இருளையா ஆகியோர் தலைமையில் வாலிபர்களின் ஒயிலாட்டம், பெண்களின் கும்மியாட்டம் 6 நாட்கள் நடந்தன. அக்.8 இரவு, கண்மாய் கரையில் இருந்து அம்மன் கரகம் எடுத்து கோயிலை வந்தடைந்தது. இதனைத்தொடர்ந்து, பருவ மழை செழித்து விவசாயம் தழைக்க வேண்டியும், உலக நன்மை வேண்டி, கோயில் வாசல் முன் நேற்று (அக்.9) காலை பொங்கலிட்டும், மாவிளக்கிட்டும், முடி காணிக்கை செலுத்தி பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று மாலை ஒயிலாட்டத்திற்கு பின் அம்மன் கரகம் முளைப்பாரி சுமந்த பெண்களுடன் வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கண்மாய் கரைக்கப்பட்டது. ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அங்குச் சாமி மற்றும் ராஜா, பாஸ்கரன் உள்ளிட்டோர் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!