18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாட்கள் காவிரி குடிநீர் சப்ளை நிறுத்தம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாட்கள் காவிரி குடிநீர் சப்ளை நிறுத்தம்

எழுதியவர்: mohan October 9, 2019, 7:02 pm

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் இருக்காது என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது அறிவிப்பு: திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் தலைமையிடத்தில் மின் பராமரிப்பு பணிகளுக்காக (கம்பரசன் பட்டி துணை மின் நிலையத்தில் காவிரி கூட்டு குடிநீர் ஏற்றம் நேற்று (அக்.9) நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ராமநாதபுரம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ராமநாதபுரத்தின் பல இடங்களில் உள்ள பிரதான குழாய்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அக்டோபர் 10, 11 தேதிகளில் காவிரி குடிநீர் விநியோகம் இருக்காது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!