18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புளியரை அருகே 13 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்த தீயணைப்புத்துறை வீரர்கள்

புளியரை அருகே 13 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்த தீயணைப்புத்துறை வீரர்கள்

எழுதியவர்: mohan October 8, 2019, 11:00 am

தென்காசி மாவட்டம் புளியரை அருகேயுள்ள பகவதிபுரம் கிராமத்தில் இரண்டு ராஜநாகங்கள் சண்டையிடும் காட்சியை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.இரு ராஜ நாகங்கள் இடையே ஏற்பட்ட மோதலில் தோல்வியடைந்த ஆண்ராஜநாகம் ஓடை வழியாக வருவதை பார்த்த பொதுமக்கள் குற்றாலம் வனத்துறை ரேஞ்சர் பாலகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதிகை இயற்கை சங்கத்தின் தலைவர் சேக்உசேன் மற்றும் சஞ்ஜீவி, விவேக் ஆகியோர் உதவியுடன் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சுமார் 13 அடி நீளமுள்ள ஆண் ராஜநாகத்தை எவ்வித உயிர்சேதமுமின்றி பிடித்து கற்குடி அரசு காப்பு காட்டில் வனத்துறைஅனுமதியுடன்விடப்பட்டது.ராஜநாகத்தை பிடித்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பிடிக்க உதவியாக இருந்த பொதிகை இயற்கை சங்கத்தினரை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!