இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பாஜக., சார்பில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தின பாதயாத்திரை நடந்தது. முதுகுளத்தூர் ஒன்றிய பொதுச்செயலர் காளிராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய துணைத்தலைவர் சத்தியமூர்த்தி வரவேற்றார். மாநில துணைத்தலைவர்குப்புராமு தொடங்கி வைத்தார். கோட்டப்பொறுப்பாளர் சண்முகராஜா, இணை பொறுப்பாளர் ராஜேந்திரன், மாவட்டத்தலைவர் முரளிதரன், நாடாளுமன்ற பூத் கமிட்டி பொறுப்பாளர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தனர். செல்வ விநாயகபுரம் விலக்கில் இருந்து முதுகுளத்தூர் நகர்
வழியாகச்சென்ற பாத யாத்திரை காந்தி சிலை முன் நிறைவடைந்தது. மரம் வளர்ப்பு, தூய்மை இந்தியா, கதர் ஆடை அணிதல், உள்நாட்டுப்பொருட்களை வாங்குவதன் பயன் உள்ளிட்ட விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், மாநில எஸ்.சி., அணி செயலாளர் புவனேந்திரன், மாவட்டத்துணைத்தலைவர்கள் முருகேசன், மங்களேஸ்வரி, குமார், மாவட்ட செயலர்கள் ராமசாமி, வடிவேல், மணிமேகலை, முத்துச்சாமி, மாவட்ட பிரசார பிரிவு பொதுச்செயலர் ,ஒன்றிய பொதுச்செயலர் காளிமுத்து, முன்னாள் மாவட்டத்துணைத்தலைவர் நாகூர்பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்
முதுகுளத்தூரில் பாஜக., சார்பில் காந்தி ஜெயந்தி பாத யாத்திரை
எழுதியவர்: mohan October 7, 2019, 2:52 pm




You must be logged in to post a comment.