17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி – ஆயூத பூஜை கொண்டாட்டம், அன்னதானம்

உசிலம்பட்டி – ஆயூத பூஜை கொண்டாட்டம், அன்னதானம்

எழுதியவர்: mohan October 7, 2019, 12:34 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனிரோட்டில் உள்ள பாண்டிகோவில் வேன் மற்றும் கார் ஸ்டாண்ட் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வெகு விமரிசையாக ஆயூத பூஜையை கொண்டாடி மகிழ்ந்தனர்.மேலும் ஆயூத பூஜையை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

நவராத்திரி விழா 9 நாட்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சரரமிக்க பொம்மைகள், சாமி சிலைகள் உள்ளிட்டவைகளை வைத்து வழிபாடு செய்வது வழக்கம். இதே போல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பெண்கள் தங்களது வீடுகளில் நவராத்திரி கொலு பொம்மைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இது போன்று வீடுகளில் நவராத்திரி கொலு பொம்மைகள் வைத்து வழிபட்டால் ஊர்செழித்து பசுமையடையும், பரம்பரை பரம்பரையாக தலைமுறைகள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்காக கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. இந்தக் கொலுவில் மதுரை மீனாட்சி சிலைகள், பாரம்பரியமிக்க சிலைகள், அகத்தியர் முனிவர்கள் உள்பட பலவகையான சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர். மேலும் நாடார் புதுத்தெருவிலுள்ள பாண்டிச்செல்வி வீட்டில் கடந்த 4 தலைமுறைகளாக கொலு பொம்மை வைத்து நவராத்திரி திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.நவராத்திரி ஒவ்வொரு நாள் முடிவிலும் சுமங்கலி பூஜை நடைபெற்று பெண்களுக்கு சுமங்கலிப் பொருள்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.இதில் பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!