17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்த நான்கு நபர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த நான்கு நபர்கள் கைது

எழுதியவர்: mohan October 7, 2019, 11:13 am

தெப்பக்குளம்  காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் மதுரை டவுன், புது ராம்நாடு ரோடு, தமிழன் தெரு அருகில் ரோந்து காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த ஜோதிமாரி  கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 1.100 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. தெப்பகுளம்  காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக்அனுப்பானடி பேருந்து நிறுத்தம் அருகில் ரோந்து காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை புது ராம்நாடு ரோடு பகுதியைச் சேர்ந்த பாண்டி முனீஸ்வரன் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும்  அவனியாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ராஜ்குமார் மதுரை டவுன், அவனியாபுரம், பெரியசாமி ரோட்டின் அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது  இருசக்கர வாகனத்தில் வந்த கிஷோர்சர்மா  விஸ்வா , ஆகிய இருவரும் சேர்ந்து கஞ்சா விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவர்கள் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 2.400 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய  இருசக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டது.

செய்தி வி காளமேகம் மதுரை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!