17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை -குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

மதுரை -குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

எழுதியவர்: mohan October 7, 2019, 10:39 am

மதுரை உத்தங்குடியில் உள்ள ப்ரீத்தி மருத்துவமனை வளாகத்தில் செரிபரல் பால்சி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். இந்த முகாமில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 சிறப்பு குழந்தைகள் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள். முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரீத்தி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்று இந்த முகாமில் நோக்கத்தையும் மருத்துவமனையின் பங்களிப்பையும் விளக்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஹேமா சிவகுமார், எஸ்.செல்லமுத்து டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் ராஜ்குமாரி, டாக்டர் விஜயசரவணன் உள்பட பல்வேறு பிரமுகர்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

 மதுரை செய்தியாளர் கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!