18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பட்டப்பகலில் ரயில்வே மேம்பாலத்தில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை -மதுரையில் பயங்கரம்

பட்டப்பகலில் ரயில்வே மேம்பாலத்தில் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை -மதுரையில் பயங்கரம்

எழுதியவர்: mohan October 6, 2019, 2:18 pm

மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள எல்லீஸ் நகர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்துள்ளது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ் எஸ் காலனி காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் யார் இந்த இளைஞன்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ரயில் நிலையம் அருகே பட்ட பகலில் நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எஸ் எஸ் காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!