தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கன மீன் எண்ணெய் வழங்குதல் மற்றும் தடுப்பூசி போடுதல் முகாம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
தமிழக அரசால் பள்ளி மாணவர்களுக்கு மீன் எண்ணெய் மாத்திரை வழங்குதல் மற்றும் ஐந்து வயது மற்றும் பத்து வயது முடிந்த மாணவர்களுக்கு டி .டி .மற்றும் டி.பி.டி .தடுப்பூசி டெட்டனஸ் , கக்குவான் இருமலை தடுக்கும் பொருட்டு போடப்படுகிறது.முகாம் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது.நேரடியாக பள்ளிக்கே வந்து தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ் தேவகோட்டை நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மேரி அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசியை போட்டார்.மீன் எண்ணெய் மாத்திரையும் வழங்கினார்.முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியை செல்வமீனாள் செய்து இருந்தார்.ஏராளமான பெற்றோர்களும் முகாமில் பங்கேற்றனர்.
தமிழக அரசின் மீன் எண்ணெய் மாத்திரை வழங்குதல்
எழுதியவர்: mohan October 6, 2019, 12:43 pm




You must be logged in to post a comment.