நெல்லை மாவட்டம் சுரண்டை தீயணைப்பு நிலையத்தின் சார்பில் காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் விபத்துகளை தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 04.10.19 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். வடகிழக்கு பருவமழையின் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறைகள், விபத்தில்லா தீபாவளி பற்றிய ஒத்திகை பயிற்சி மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு தீயணைப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து திரு அ பாலசந்தர் தலைமையில் கல்லூரி மாணவ மாணவிகள் முன்பு நிகழ்த்தி காட்டி பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் இதில் ஏட்டு கணேசன், தீயணைப்பு வீரர்கள் ராஜா, சாமி ஆகியோர் கலந்து கொண்டு இது குறித்து சிறப்பாகப் பயிற்சி அளித்தனர். கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் சுரண்டை தீயணைப்பு நிலையத்தின் இந்த பாதுகாப்பு நிகழ்ச்சியை பாராட்டினர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.