17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்ரமணிய சிவா மணிமண்டபத்துக்கு கலெக்டர் மலர்விழி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்ரமணிய சிவா மணிமண்டபத்துக்கு கலெக்டர் மலர்விழி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

எழுதியவர்: mohan October 5, 2019, 12:00 pm

சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்ரமணிய சிவா மணிமண்டபத்தில் கலெக்டர் மலர்விழி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தலைவர்களின் ஒருவர் தியாகி சுப்பிரமணிய சிவாவின் 136அது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் அமைந்துள்ள தியாகி சுப்ரமணிய சிவா மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி சுப்பிரமணிய சிவா வின் நினைவு மண்டபத்தில் மலர் தூவியும் அவருடைய உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து பாப்பாரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சுப்பிரமணிய சிவாவின் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் அன்பழகன். மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் வேலுமணி. முன்னாள் பேரூராட்சித் தலைவர் பாபு. தாசில்தார் சதாசிவம். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன். தண்டபாணி .பேரூராட்சி  செயல் அலுவலர் விஜயின். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள்  மற்றும் பொதுமக்கள் தியாகி சுப்ரமணிய சிவா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!