17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் முன்பு 2-ம் நாளாக மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் முன்பு 2-ம் நாளாக மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எழுதியவர்: mohan October 5, 2019, 9:53 am

திருவண்ணாமலை கோட்ட அளவில் உள்ள தாலுகா அலுவலகங்களில் கடந்த 3 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கேட்டு கொடுக்கப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று நேற்று முன்தினம் மாற்றுத் திறனாளிகள் திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வருவாய் துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.2-வது நாளாக நேற்றும் 04.10.19 காத்திருப்பு போராட்டம் நடந்தது.

இதையடுத்து காலை திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி, தாசில்தார் அமுல் மற்றும் வருவாய்த்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது கடந்த 3 ஆண்டுகளாக கொடுத்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் கொடுக்கும் மனுக்களுக்கு சரிவர பதில் அளிப்பதில்லை. மாற்றுத் திறனாளிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் சரிவர வருவதில்லை என்றனர்.இன்னும் ஒருவாரத்தில் தங்களிடம் இருந்து பெற்ற மனுக்களுக்கு உரிய பதில் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவி கலெக்டர் கூறினார். இதனை ஏற்க மறுத்த அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மதியத்திற்கு மேல் தாசில்தார் அமுல் அவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!