அழகப்பா பல்கலை., கல்லூரிகளுக்கிடையேயான மேஜை பந்து போட்டி, இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசைன் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் இராமநாதபுரம், கீழக்கரை,
இளையான்குடி,காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, பூவந்தி பகுதி கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பெண்களுக்கான பிரிவில் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மாணவியர் இரண்டாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற அணியினருக்கு டாக்டர் ஜாஹிர் உசைன் கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி சுழற்கோப்பை வழங்கினார். ஏற்பாடுகளை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் இரா.கலா செய்திருந்தார்.
பல்கலை மேஜை பந்து போட்டி கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி பரிசு
எழுதியவர்: mohan October 4, 2019, 5:24 pm




You must be logged in to post a comment.