தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுக்காக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வாணையம் புதிய பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது. அதில் பொதுத்தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டி தேர்வாளர்கள் பெரிதும் பாதிக்கபடுகின்றனர். பெரும்பாலும் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களும், கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் பெரிதும்
பாதிக்கபடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொதுப்பாடத்திட்டம் தமிழ் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக அரசை கண்டித்தும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அக்கினி சிறகுகள் அறக்கட்டளை என்ற தன்னார்வ அமைப்;பு மற்றும் போட்டி தேர்வாளர்கள் உள்ளிட்ட அனைவரும் உசிலம்பட்டியில் உள்ள தேனி ரோட்டில் ஊர்வலமாக சென்று வருவாய் கோட்டாட்சியர் பானுகோபனிடம் பொதுத்தமிழ் பகுதியை மீண்டும் சேர்க்க வலியுறுத்தி மனு அளித்தனர். அதனை தொடர்ந்து கோட்டாட்சியர் பானுகோபன் மாவட்ட ஆட்சியரிடம் கவனத்திற்கு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2ல் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வின் புதிய பாடத்திட்டத்தில் பொதுத்தமிழ் நீக்கப்பட்டதை கண்டித்து தன்னார்வ அமைப்பின் சார்பில் ஊர்வலமாக சென்று கோட்டாட்சியரிடம் மனு
எழுதியவர்: mohan October 4, 2019, 1:27 pm




You must be logged in to post a comment.