18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் வைகை அணை கூட்டுக்குடிநீா் திட்டத்திலிருந்து ரூ 73 கோடி மதீப்பிட்டில் 4 புதிய மேல் நிலைத்தொட்டிகள் கட்டுவதற்கு பூமிபூஜையை சட்டமன்ற உறுப்பினா் நீதிபதி துவக்கி வைத்தாா்.

உசிலம்பட்டியில் வைகை அணை கூட்டுக்குடிநீா் திட்டத்திலிருந்து ரூ 73 கோடி மதீப்பிட்டில் 4 புதிய மேல் நிலைத்தொட்டிகள் கட்டுவதற்கு பூமிபூஜையை சட்டமன்ற உறுப்பினா் நீதிபதி துவக்கி வைத்தாா்.

எழுதியவர்: mohan October 4, 2019, 1:22 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 24 வார்டுகளை கொண்டு நகராட்சியாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் ஆண்டிபட்டி வைகை அணையிலிருந்து ஆண்டிபட்டி சேடபட்டி கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன. நகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தமிழக அரசால் தனி அரசானை வெளியிடப்பட்டு ரூ.73 கோடி செலவில் தற்போதுள்ள மேல்நிலைதொட்டி 5க்கும் மற்றும் புதியதாக அமைக்கப்படவுள்ள 4 மேல்நிலைதொட்டி கட்டப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுவதற்காக 58.679கி.மீட்டர் தொலைவில் பகிர்மான குழாய் அமைத்து குடிநீர் வழங்குவதற்காக திட்டமிடப்பட்டு அதற்கான பணியினை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி பூமிபூஜைசெய்து தொடங்கி வைத்தார்.

இ;ந்த திட்டம் நிறைவேற்றினால் நகர பகுதியில் வசிப்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒன்றுக்கு சராசரி 135 லிட்டர் வீதம் குடிநீர் கிடக்கும் அதிகாரிகள் என தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி அதிமுக நகரசெயலாளர் பூமாராஜா, சேடபட்டி அதிமுக நிர்வாகி துரைதனராஜ், முன்னாள் ஊராட்சி சேர்மன் பால்பாண்டி, குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!