17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணி செய்யாவிடாமல் தடுத்தவா்களை கைது செய்யக்கோாி ஊழியா்கள் தா்ணா

பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணி செய்யாவிடாமல் தடுத்தவா்களை கைது செய்யக்கோாி ஊழியா்கள் தா்ணா

எழுதியவர்: mohan October 4, 2019, 10:25 am
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தாரா என்பவரிடம் அமானிமல்லாபுரத்தை சேர்ந்த ராஜன்மகன் நாகராசு (33) ராமன் மகன் வெங்கடாசலம் (50) ஆகிய இருவரும் அமாணிமல்லாபுரம் ஊராட்சியின் வரவு – செலவு கணக்கு மற்றும் செயல்படுதத்ப்பட்ட திட்டங்கள் குறித்து விளக்கம் கேட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரியிடம் அனுமதி பெற்று தருவதாக கூறினார். இதை ஏற்காத இருவரும் ஒருமையில் பேசினார்கள். மேலும் பணி செய்யாவிடாமல் தடுத்ததனர். இதனால் தாராவிற்க்கு ஆதரவாக 45 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வாயிலை முற்றுகையிட்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் இவர்கள் இருவரின் மீதும் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட தின் பேரில் பாலக்கோடு வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!