18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே கீாிபட்டி கிராமமக்கள் சாா்பில் மரக்கன்றுகள்- பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

உசிலம்பட்டி அருகே கீாிபட்டி கிராமமக்கள் சாா்பில் மரக்கன்றுகள்- பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

எழுதியவர்: mohan October 3, 2019, 6:23 pm

உசிலம்பட்டி அருகே கீரிபட்டி கிராமமக்கள் சார்பில் மரக்கன்றுகள் மற்றும் பனைவிதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கீரிபட்டி கிராமத்தில் கிராம மக்கள் சார்பில் பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கிராமத்திலுள்ள கண்மாய் கரைப்பகுதி மற்றும் சாலையோரங்களில் பனை விதைகள் மற்றும் வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகளை கிராம மக்கள் நட்டனர்.இந்நிகழ்ச்சியில் பள்ளிக்குழந்தைகளும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இதில் கீரிபட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி ( கீரின் பார்க் பள்ளி ) ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், கீரிபட்டி கிரிக்கெட் கிளப்பைச் சேர்ந்த இளைஞர்கள் உட்பட அனைவரும் சேர்ந்து மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகளை நட்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் உட்பட் பலர் கலந்துகொண்டு 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனா்.வளரும் குழந்தைகளுக்கு மரம் நடுதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பள்ளிக்குழந்தைகளை பங்கேற்க வைத்ததாக கிராமமக்கள் தெரிவித்தனர்.நிகழ்ச்சி ஏற்ப்பாட்டை வங்காருத்தேவன் கபடிக்குழு மற்றும் கிாிக்கெட குழு அமைப்பைச் சோ்ந்தவா்களும் பொதுப்பணித்துறை அதிகாாிகளும் செய்திருந்தனா்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!