17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் 5 லட்சம் மதிப்பில்பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் – குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைப்பு.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் 5 லட்சம் மதிப்பில்பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் – குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைப்பு.

எழுதியவர்: mohan October 3, 2019, 12:48 pm

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் பறிமுதல் – குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைப்பு.திருவண்ணாமலை நகர மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள வணிக வளாக கட்டிடத்தில் முபாரக் என்பவர் மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மத்திய பேருந்து நிலைய பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நடப்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் மற்றும் டீ கப்புகள் உள்ளிட்ட 500 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்து குடோனுக்கு சீல் வைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!