18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே சாலை விபத்து. வேலூர் சிஎம்சி டாக்டர் பலி.. ஒருவர் படுகாயம்…

ஆம்பூர் அருகே சாலை விபத்து. வேலூர் சிஎம்சி டாக்டர் பலி.. ஒருவர் படுகாயம்…

எழுதியவர்: mohan October 3, 2019, 10:55 am

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த டாக்டரும் பெனடிக்ட் மற்றும்  ஜூலியா ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி வந்தனர். ஆம்பூர் அடுத்த வெங்கல் அருகே வந்த போது பைக் அருகில் இருந்த தடுப்புச் சுவர் மீது மோதி சாலையில் விழுந்தது. இதில் இருவரும் படுகாயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஷர்மிளா பெனடிக்ட் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் படுகாயமடைந்த ஜூலியாவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!