காட்பாடி- அரக்கோணம் இடையே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் சென்னைக்கு வரும் ரயில்கள் தாமதமாகி உள்ளன. இதனால் அரை மணி நேரம் ரயிலோவே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அரக்கோணம் அடுத்த மகேந்திரவாடி ரயில் நிலையில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் இருந்து ஒரு பலத்த சத்தம் கேட்டது இதனையடுத்து அங்கு இருக்கக்கூடிய அதிகாரி ரயில்வே மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள் ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். திருப்பத்தூரில் இருந்து சென்னை வரக்கூடிய எட்டி என்ற விரைவு ரயிலானது வந்து கொண்டிருந்த போது இந்த விரிசலானது கண்டுபிடிக்கப்பட்டது.
அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல். ரயில்கள் தாமதம்..
எழுதியவர்: mohan October 3, 2019, 10:34 am




You must be logged in to post a comment.