17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

மதுரையில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

எழுதியவர்: mohan October 2, 2019, 6:02 pm

மதுரை பைபாஸ் சாலை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதில் மழைநீர் சேர்ந்து  உள்ளது. அதில் டெங்கு கொசு உருவாகி உள்ளது.மாநகராட்சியிடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் குற்றம்சாட்டுகிறார்கள். இதனால் வெகு வேகமாக டெங்கு காய்ச்சல்பரவும் என அச்சத்தில் உள்ளார்கள். மழை பெய்து கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு மேல் ஆகி விட்டது எனினும் மழை நீர் வடியாத காரணத்தினால் தண்ணீர் அங்கேயே தேங்கி உள்ளது. இதை அகற்ற உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!