17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே அடிப்படைவசதி செய்து தரக்கோரி கிராமசபைக்கூட்டத்தில் அதிகாரிகளை கிராமமக்கள் முற்றுகை

உசிலம்பட்டி அருகே அடிப்படைவசதி செய்து தரக்கோரி கிராமசபைக்கூட்டத்தில் அதிகாரிகளை கிராமமக்கள் முற்றுகை

எழுதியவர்: mohan October 2, 2019, 5:39 pm

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் கிராமங்கள் தோறும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏ.கிருஷ்ணாபுரம் கிராமத்திற்குப்;பட்ட புதுப்பட்டியில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு செல்லம்பட்டி ஊராட்சி உள்ளாட்;சி தேர்தல்பிரிவு அதிகாரி பாண்டி வருவாய் அலுவலர் கார்த்திகாராணி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டு கூட்டத்தை நடத்தினர்.இக்கூட்டத்தில் வழக்கறிஞர் செல்லக்கிளி கல்யாணி தலைமையில் திரண்ட கிராமமக்கள் கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளான சாலைவசதி குடிநீர்வசதி போன்ற வசதிகளை செய்து தராத அரசைக்கண்டித்து நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக கிருஷ்ணாபுரம் கிராமமக்கள் அறிவித்த நிலையில் அரசு அதிகாரிகள் தரப்பில் விரைவில் பணிகள் நடைபெறும் எனக்கூறியதால் தேர்தல் புறக்கணிப்பு கைவிடப்பட்டது.ஆனால் இதுவரை எந்தப்பணிகளும் நடைபெறவில்லை.எனவேடி அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.விரைவில் நடைபெறும் எனக்கூறியதையடுத்து கூட்டத்தில் பங்கேற்றனர்.விரைவில் பணிகள் நடைபெறா விட்டால் வரும் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்போவதாக கிராமமக்கள் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!