இராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அரசு மேல்நிலை பள்ளி நாட்டு நலப்பணி திட்ட 7 நாள் சிறப்பு முகாம் நயினாமரைக்கான் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. தொடக்க விழாவிற்கு தலைமை ஆசிரியை யுனைசி தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் அய்யணன், மண்டபம் மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். முகாமில் கோயில். குளம். சாலையோர உழவார பணி, பிளாஸ்டிக் ஒழிப்பு, மழை நீர் சேகரிப்பு, ஊட்டசத்து, சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. நயினாமரைக்கான் அரசு தொடக்க பள்ளியில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், திருப்புல்லாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. கண் மருத்துவ உதவியாளர் டேனியல் ஜோசப் பரிசோதனை செய்தார்.
நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் ரவி, நயினாமரைக் கான் கிராம தலைவர் மணிமாதவன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். இதில் 9 பேர் அறுவை சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். முகாம் ஏற்பாடுகளை திட்ட அலுவலர் ரகுமதுல்லா, ஆசிரியர் அய்யப்பன் ஆகியோர் செய்தனர்.







You must be logged in to post a comment.