17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் அருகே தேங்கும் கழிவு நீரால் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் அருகே தேங்கும் கழிவு நீரால் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

எழுதியவர்: mohan October 1, 2019, 4:01 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது  நக்கலப்பட்டி  கிராமம்.இக்கிராமத்தின் மையப்பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் செயல்பட்டு வருகிறது.இதில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.இந்த அங்கன்வாடி கட்டிடத்தின் அருகில் குடிநீர் குழாய் ஒன்று உள்ளது.குழாயின் அருகிலேயே சாக்கடையும் அமைக்கப்பட்டுள்ளது.சாக்கடை சுத்தம் செய்யப்படாததால் குடிநீர் குழாயிலிருந்து வீணாகும் குடிநீர் சாக்கடையில் தேங்கிய நிலையில் காணப்படுகிறது.இதனால் இப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்ப்பட்டுள்ளது. மேலும் இந்த கழிவுநீரால் டெங்கு மலேரியா போன்ற வியாதிகள் அங்கன்வாடியிலுள்ள குழந்தைகளுக்கு பரவும் அபாயம் உள்ளது.எனவே வியாதிகள் பரவும் முன் சாக்கடையை அகற்றி சுத்தம் செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!