18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போளூரில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது – 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

போளூரில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது – 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

எழுதியவர்: mohan September 30, 2019, 7:33 pm

போளூரை சேர்ந்தவர் தயாளன், கட்டிட மேஸ்திரி. இவர்,  இரவு மாட்டுப்பட்டி தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி தயாளனிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றார்.இதுகுறித்து தயாளன் போளூர் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று வசூர் கூட்ரோடு பகுதியில் சுற்றித்திரிந்த வாலிபரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வேலூர் மாவட்டம் ஆலங்காயத்தை அடுத்த வெல்லகுட்டை துரிஞ்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்த சங்கர் ( 27) என்பதும், தயாளனிடம் பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றதும், மேலும் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடியதும் தெரியவந்தது.இதனையடுத்து போலீசார் சங்கரை கைது செய்து, போளூர் நற்குன்று மேடு பகுதியில் புதர்களிலும், தும்பக்காடு காட்டு பகுதியிலும் மறைத்து வைத்திருந்த 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!