18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » கனமழை எதிரொலி-குற்றாலம் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு-சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை

கனமழை எதிரொலி-குற்றாலம் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு-சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை

எழுதியவர்: mohan September 30, 2019, 7:23 pm

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.குற்றாலம் மலைப்பகுதி மற்றும் தென்காசி சுற்றியுள்ள செங்கோட்டை,வடகரை, கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் குளிப்பதற்கு சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்ப்புடன் வந்து திரும்பி செல்கின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!