17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பஞ்சமி நில மீட்பு போராட்டம்

பஞ்சமி நில மீட்பு போராட்டம்

எழுதியவர்: mohan September 30, 2019, 6:57 pm

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்கா சாத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கடப்பன்குட்டை பகுதியில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு வழங்கிய பஞ்சமி நிலத்தை ஆதிக்க சமூக மக்கள் கைப்பற்றி இருப்பதை மீட்கக்கோரி பஞ்சமி நில மீட்பு போராட்டம் நடைபெற்றது.தோழர் சீனிவாச ராவ் அவர்களின் நினைவு நாளான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவை இணைந்து இந்த போராட்டத்தை நடத்தின.இந்த போராட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆதிக்க சமூக மக்கள் பஞ்சமி நிலத்தை கைப்பற்ற காரணமாக இருந்த வட்டாட்சியரை கைது செய்யக்கோரி அங்கே குழுமியிருந்த போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.காவல்துறையினர் போராட்டக்காரர்களும் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!