17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவிழாவில் தவறவிட்ட தங்கத்தை உாியவாிடம் ஒப்படைத்த போலிசாா்.

திருவிழாவில் தவறவிட்ட தங்கத்தை உாியவாிடம் ஒப்படைத்த போலிசாா்.

எழுதியவர்: mohan September 30, 2019, 6:41 pm

மதுரை டி. கல்லுப்பட்டி அருகே கோபாலசாமி மலை கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது,இந்நிலையில் கொட்டாணிபட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கூட்ட நெரிசல் காரணமாக அவரது மகன் கழுத்தில் இருந்த, ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள 2 கிராம் தங்க தாயத்தை கூட்டத்தில் தவற விட்டுவிட்டார்.பல்வேறு இடங்களில் தேடியும் அவரால் தாயத்தை கண்டுபிடிக்க முடியவில்லை,  சேடபட்டி காவல் நிலைய காவலர்  சிவாவிடம் அந்த தாயத்து கிடைக்கவே,விரைந்து செயல்பட்டு ஒலிபெருக்கியின் மூலம் மீண்டும் மீண்டும் தெரிவித்தார். இதனை கேட்ட குழந்தையின் தந்தை கார்த்திக் என்பவர் போலீசாரிடம் தகுந்த ஆதாரங்களுடன் வந்து தாயத்தை பெற்றுக்கொண்டு, மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் திரு.சிவாவிற்கு நன்றி தெரிவித்து சென்றார்.

.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!