18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை திபத்திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம்நடும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை திபத்திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம்நடும் நிகழ்ச்சி

எழுதியவர்: mohan September 30, 2019, 4:20 pm

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.மேலும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அத்துடன் நகரின் மையப்பகுதியில் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா முக்கியமானதாகும். இந்த ஆண்டிற்கான தீபத்திருவிழா வருகிற நவம்பர் மாதம் 28-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது.கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி இன்று 30-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணியில் இருந்து 7.05 மணிக்குள் நடைபெற்றது. அது சமயம் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!