17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒரே பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் தீ விபத்து அதிக மின் அழுத்தம் காரணமா? அச்சத்தில் வியாபாரிகள்..

ஒரே பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் தீ விபத்து அதிக மின் அழுத்தம் காரணமா? அச்சத்தில் வியாபாரிகள்..

எழுதியவர்: mohan September 30, 2019, 3:40 pm

 மதுரை வடக்குவெளி வீதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது.இங்கு மின்கசிவு காரணமாக கரும்புகை சூழ்ந்தது. உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு மதுரை  தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த  அதிகாரி  வெங்கடேசன்  தலைமையிலான குழுவினர் விரைவாக வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த மாதத்தில் மட்டுமே அதே பகுதியில் இது மூன்றாவது விபத்தாகும். தீ விபத்து குறித்து திலகர்திடல் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!