18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாநில அளவிலான ஜேஆர்சி பயிற்சி முகாம். ராமநாதபுரம் மாணவர்களுக்கு பாராட்டு..

மாநில அளவிலான ஜேஆர்சி பயிற்சி முகாம். ராமநாதபுரம் மாணவர்களுக்கு பாராட்டு..

எழுதியவர்: mohan September 30, 2019, 2:11 pm

மாநில அளவிலான ஜூனியர் ரெட் கிராஸ் மாணவ, மாணவியருக்கான பயிற்சி முகாம் கிருஷ்ணகிரியில் 27.9.2019 முதல் 30.9.2019 வரை நடைபெற்றது. இன்று நடந்த நிறைவு நாள் நிகழ்விற்கு கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் ஜி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஜேஆர் சி ஒன்றிய அமைப்பாளர் ஜெ.ஜெயபிரகாஷ் வரவேற்றார்.

ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் பங்கேற்ற மண்டபம் முகாம், பாம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி, சித்தார் கோட்டை முகமதியா மேல்நிலைப்பள்ளி ஜேஆர்சி மாணவர்கள் அங்கு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் முதலிடம் பிடித்தனர். வென்ற மாணவர்களுக்கு, பொறுப்பாசிரியர் பாம்பன் அரசு மேல்நிலைப்பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சலர் கார்த்திக் ஆகியோருக்கு பள்ளி கல்வித்துறை நாட்டு நலப்பணி திட்ட இணை இயக்குநர் எம்.வாசு சான்றிழ் வழங்கி பாராட்டினார். ராமநாதபுரம் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் எம்.ரமேஷ், கிருஷ்ணகிரி மாவட்ட கன்வீனர் பி.பாலமுருகன் உள்பட இதர மாவட்ட கன்வீனர்கள் கருத்தாளர்களாக பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!