17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மத்திய அரசைக் கண்டித்து மாலை நேர தர்ணா போராட்டம்

மத்திய அரசைக் கண்டித்து மாலை நேர தர்ணா போராட்டம்

எழுதியவர்: mohan September 28, 2019, 6:53 pm

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கான, தேசிய புலனாய்வு சட்டம், முத்தலாக் சட்டம், புதிய கல்விக் கொள்கை, சட்ட விரோத தடுப்பு சட்டம், காஷ்மீர் சிறப்பு பிரிவு 370 – 3 A ரத்து போன்ற அடக்கு முறை உரிமை பறிப்பு சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பாக மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.மாவட்டக் குழு தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் மன்னர் மன்னன், மாவட்ட குழு மஸ்தான், அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் ராஜப்பன் தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் இப்ராஹிம், அக்பர், சஞ்சீவ் குமார், தமீம் சேட், ராஜா, மோகன், ஆரோக்கியராஜ், சவுகத் அலி, உசேன், வி.ச.தாலுகா செயலாளர் முருகன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் வெண்மணி, தமுமுக நகர தலைவர் கபில் ரஹ்மான், இஸ்லாமிய நலக் கூட்டமைப்பு தலைவர் சையது இஸ்மாயில், இநகூ செயலாளர் நிகார் ரஹ்மான், உட்பட பலர் தர்ணா போராட்டத்தில் பங்கேற்றனர்

 சாதிக்.பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!