பெருந்துறை அருகே விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் உதவி ஆய்வாளர் ரபி வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றிக்கொண்டிருந்த இருநபர்களை பிடித்து விசாரித்த பொழுது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.இதனால் சந்தேகமடைந்த போலீசார்
அந்நபர்களை காவல்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தியதில் அவர்களிடம் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 கிராம் எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றினர். அதில் ஒருவர் விஜயமங்கலம் பகுதியை சேர்ந்த ரவிகண்ணன் என்பதும் இன்னொருவர் ஊத்துக்குளி முரட்டுபாளையத்தை சேர்ந்த முருகேசன் என்பதும் தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் பெருந்துறை குற்றவியல் நீதிமன்ற நடுவர் சபீதா முன் ஆஜர்படுத்தி பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர்.
பெருந்துறை அருகே கஞ்சாவிற்பனை செய்த இருவர் கைது
எழுதியவர்: mohan September 28, 2019, 6:43 pm




You must be logged in to post a comment.