17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மஹாளய அமாவாசை சிறப்பு ரயில் இயக்காததால் பயணிகள் அவதி

மஹாளய அமாவாசை சிறப்பு ரயில் இயக்காததால் பயணிகள் அவதி

எழுதியவர்: mohan September 28, 2019, 6:01 pm

மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், சேதுக்கரை, தேவிபட்டினம் ஆகிய புண்ணிய தலங்களில் புனித நீராட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் நேற்று 27.09.19 மாலையில் இருந்து வந்தனர். தர்ப்பணம் செய்து முன்னோரை வழிபட்ட இவர்களில் தொலைதூர பயணிகள் பலர் கட்டண குறைவு என்பதால் மதியம் 12:30 மணி ராமேஸ்வரம் – மதுரை பாசஞ்சர் ரயிலை பிடிக்க ராமநாதபுரம் வந்தனர். 13 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயில் கால் வைக்கக் கூட இடமின்றி கூட்டம் நிரம்பி வழிந்தது.2 நிமிடம் மட்டும் நிறுத்தப்பட்ட ரயிலில் டிக்கெட்டுடன் காத்திருந்தவர்களில் பலரால் ஏற முடியாமல் போனது. பாசஞ்சர் ரயில் என்பதால் டிக்கெட் திரும்ப செலுத்தி பணம் பெற இயலாததால், அடுத்த ரயிலில் பயணிக்க இன்றிரவு 7:20 வரை காத்திருக்கும் நிலை நீடித்தது. தனி நபராக வந்த சிலர் ரயில் டிக்கெட் கட்டண இழப்புடன் பஸ்சில் பயணிக்க நேரிட்டது.

கடந்த காலங்களில் தை, ஆடி, மகாளய அமாவாசை நாட்களில் சிறப்பு ரயில் இயக்கிய மதுரை கோட்டம் இம்முறை இயக்கவில்லை. இது தொடர்பாக ரயில்வே உயரதிகாரியிடம் கேட்ட போது சிறப்பு ரயில் இயக்க ஏதேனும் ஒரு அமைப்பு கோரிக்கை மனு அளித்தால் மட்டுமே இயக்க முடியும். தன்னிச்சையாக எதுவும் செய்ய இயலாது. அது போல் பாசஞ்சர் ரயிலுக்கு டிக்கெட் ரயிலை தவற விட்டால் பயணக் கட்டணம் திரும்ப செலுத்த விதிகள் பொருந்தாது என்றார். இனி வரும் காலங்களில் இது போன்ற நிலையை தவிர்க்க சிறப்பு ரயில் அல்லது கூடுதல் பெட்டிகளுடன் ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் முன் வருமா?

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!