வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த எஸ் என் பாளையம் பகுதியில் ஆயுதங்களுடன் சேற்றில் சிக்கி கார் ஒன்று நிற்பதாக பொன்னை போலீசுக்கு தகவல் கிடைத்தது.போலீசார் அங்கு சென்று பார்த்த போது கத்தி போன்ற ஆயுதங்களும் ஒரு செம்மரக்கட்டையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது வனத்துறையினர் ரூ 60 ஆயிரம் மதிப்புள்ள செம்மரத்தை கைப்பற்றி கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.திருவள்ளுவர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கே.எம்.வாரியார்




You must be logged in to post a comment.