மஹாளய அமாவாசையை முன்னிட்டு திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் பெரும் திரளான பொதுமக்கள் ஐயன்குளம் மற்றும் பிரம்ம தீர்த்த குளக்கரையில் கூடி தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது நம் சந்ததியை நல்வழிபடுத்தும் என்பது ஐதீகம்.
தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசிப்பெற்று பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.மாதத்தில் ஒரு முறை வரும் அம்மாவாசை தினங்களில் முன்னோர்களை வணங்க முடியாதவர்கள், புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்து வணங்கினாலேயே போதுமானது.
இந்நிலையில் பஞ்சபூதக் தலங்களில் அக்னித் தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள ஐயன்குளம் மற்றும் பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சிவ வழிபாடு நடத்தினர்.




You must be logged in to post a comment.