திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உடன் இணைந்துள்ள ஐயங்குள வடமேற்கு கரையில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு சஞ்சீவிராயர் திருக்கோயில் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, காவல்துறையினர் விசாரணை. நடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில் சில சமூக விரோதிகளும், விஷமிகளும் ஆலயத்திற்குள் சென்று சன்னதி கதவை கற்களால் தாக்கி உடைத்து கோயில் உள்ளே நுழைந்துள்ளனர்.பின்னர் கோயில்
உள்ளிருந்த பொருட்களையும் சிலைகளையும் தாக்கிவிட்டு அங்கிருந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். கொள்ளையர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் காவல்துறைக்கு எழுதியுள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளது.திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் இது சம்பந்தமாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருள்மிகு சஞ்சீவிராயர் திருக்கோயில் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு.
எழுதியவர்: mohan September 28, 2019, 3:25 pm




You must be logged in to post a comment.