திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தாலுகா பொருத்தவரை தற்போது வளர்ந்து வரும் தாலுகாவில் நிலக்கோட்டை ஒன்றாகத் திகழ்கிறது. இப்பகுதியில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்து கொண்டே இருக்கிறது. இந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்ய தற்போது தமிழக அரசு பல்வேறு வகைகள் சாலையை சீரமைக்கும் பணியை செய்து வருகிறது.. அந்த வகையில் நிலக்கோட்டை – அணைப்பட்டி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான முதற்கட்ட பணியாக சர்வை
நடைபெற்றது. இதுகுறித்து வத்தலக்குண்டு உப கோட்டை பொறியாளர் செந்தில்குமார் கூறியதாவது : தற்போது நிலக்கோட்டை பொருத்தவரை பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. இதனை முறையாக சர்வை செய்து அதனைத்தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அனைத்தும் விரைவில் அகற்றப்படும். இது அரசியல் பாகுபாடின்றி நடத்தப்படும். மேலும் பொதுமக்களும் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றி கொண்டால் அதிகாரிகளுக்கு மிக உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.
நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா




You must be logged in to post a comment.