17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை- இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஆதிதிராவிடர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

நிலக்கோட்டை- இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஆதிதிராவிடர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

எழுதியவர்: mohan September 28, 2019, 3:06 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலத் துணைச் செயலாளர் சக்திவேல் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.இந்தப் போராட்டத்தில் நிலக்கோட்டை தாலுகா பட்டிவீரன்பட்டி அம்பேத்கர் நகரில் உள்ள ஆதி திராவிடர் மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பட்டா கேட்டு மனு கொடுத்தும் இதுவரை பட்டா வழங்காததை கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.இந்த போராட்டத்தில் மாநில துணைச் செயலாளர் திருசித்தன், வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் பாக்யராஜ், மாவட்ட அமைப்பாளர் காதர்மைதீன், நிலக்கோட்டை ஒன்றிய துணைச் செயலாளர் சுதந்திரம், உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!