17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையிலிருந்து இயக்கப்படும் சிறப்பு ரெயில்-தென்னக ரெயில்வே அறிவிப்பு

நெல்லையிலிருந்து இயக்கப்படும் சிறப்பு ரெயில்-தென்னக ரெயில்வே அறிவிப்பு

எழுதியவர்: mohan September 28, 2019, 1:59 pm

 பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க நெல்லை மற்றும் கோவையிலிருந்து ஜபல்பூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.நெல்லை-ஜபல்பூர் இடையே 01703 என்ற எண்ணுடைய சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் அக்டோபர் மாதம் 5, 12, 19, 26-ந்தேதி, நவம்பர் மாதம் 2-ந்தேதிகளில் மாலை 4 மணிக்கு நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. கோவை-ஜபல்பூர்(02197) இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் அக்டோபர் மாதம் 7, 14, 21, 28-ந்தேதி, கோவை ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 7 மணிக்கு இயக்கப்படுகிறது.

மேலும் சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல்-சந்திரகாச்சி(82622) இடையே சுவிதா சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் அக்டோபர் மாதம் 23-ந்தேதி மதியம் 3.15 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது என தென்னக ரெயில்வேயின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!