திருச்சி கிராமாலயா தொண்டு நிறுவனம், மும்பை பங்கு சந்தை நிறுவன நிதியுதவியுடன் (NSE Foundation), இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் மண்டபம் ஒன்றியத்தில் மூன்று ஆண்டில் 30 நீடித்த நிலைத்த சுகாதார கிராமங்களை உருவாக்கும் முனைப்பில் தனிநபர் இல்ல கழிப்பறைகள் 4 ஆயிரம், பள்ளி கழிப்பறைகள் 55, ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் 10, அங்கன்வாடி மையங்களில் 30 கழிப்பறைகள் மராமத்து செய்ய திட்டமிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது அக்., 2018 முதல் செப்.,2019 ஓராண்டு நிறைவில் 2500 தனிநபர் இல்ல கழிப்பறைகள், 20 பள்ளி கழிப்பறைகள், 10 அங்கன்வாடி மைய கழிப்பறைகள், 5 ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகங்கள் மராமத்து செய்யப்பட்டுள்ளது .
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஹெட்சி லீமா அமலினி, மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரமோகன் தலைமையில் நீடித்த நிலைத்த 10 முன்மாதிரி கிராமங்கள் அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தூய்மை பாரத இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ( ஊரக வளர்ச்சி) நவநீதம், யுனிசெப் நிறுவன தமிழ்நாடு மாநில ஆலோசகர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.கிராமாலயா ராமநாதபுரம் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாப்பு, மண்டபம் திட்ட பவுல், அந்தோணி ராஜ் வழிநடத்தினர் . கிராமாலயா சுகாதார நலக்கல்வியாளர்கள் பிரியா , சத்யா, பழனீஸ்வரி, ரேணுகா, தொழில்நுட்ப அலுவலர்கள் ஆனந்தி, ஜான்சிராணி வழிநடத்தினர்.
19.9.19ல் கடற்கரை சத்திரம் (புதுவலசை ஊராட்சி ) ,19.9.19ல் மாந்தோப்பு (இருமேனி ஊராட்சி) 20.9.19ல் மேட்டு காரான் (காரான் ஊராட்சி),24.9.19ல் உசிலங்காட்டு வலசை,(செம்படையார்குளம் ஊராட்சி)24.9.19-ல் வலங்காபுரி (தாமரைக்குளம் ஊராட்சி).25.9.19-ல் சேர்வைகாரன்ஊரணி( ஆற்றங்கரை ஊராட்சி), 26.9.19-ல் கிருஷ்ணாபுரம் (பனைக்குளம் ஊராட்சி) 26.9.2019 ல் சின்னுடையார்வலசை ( மானாங்குடி ஊராட்சி) 27.9.19 -ல் பூமாலைவலசை ( என்மனங்கொண்டான் ஊராட்சி). 10.7.19ல் வடகாடு (தங்கச்சிமடம் ஊராட்சி) நடந்த நிகழ்ச்சிகளில் கிராம தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், பள்ளி ஆசிரியர்கள், அந்தந்த ஊராட்சி கிராமாலயா குடிநீர் சுகாதார நலக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.




You must be logged in to post a comment.