தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் காரிமங்கலத்தில் சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டதுறை சார்பில் தனியார் மண்டபத்தில் கர்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை உயர்கல்விதுறை அமைச்சர் துவங்கி வைத்தார்.பாலக்கோடு, காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 320 கர்பிணி பெண்களுக்கு சமூதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கர்பிணி பெண்களுக்கு வளையல், குங்குமம், மஞ்சள், வெற்றிலைபாக்குதட்டு, புடவை அடங்கிய சீர்வரிசை தட்டு மற்றும் அறுஞ்சுவை உணவு வழங்கப்பட்டது.
கர்பிணி பெண்களுக்கு தமிழக அரசு பல்வெறு நலதிட்ட உதவிகளை செய்து வருவதாகவும், குழந்தை ஆரோக்கியமாக பிறக்க கர்பிணி தாய்மார்களுக்கு சத்துமாணவு, சத்துமாத்திரைகள், கர்பகால பண உதவிகள் செய்து வருவதாகவும் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 1480 கர்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட உள்ளதாக உயர்கல்விதுறை அமைச்சர் தெரிவித்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி கர்பிணி பெண்களுக்கு சந்தனம் பூசி குங்குமம் பொட்டு பூ வைத்து வளைகாப்பு செய்து வைத்தார் .கர்ப்பிணி பெண்கள் அனைவரும் பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சுகாதாரத்துடணும் நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ப்பதாக உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்சியில் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் தொமு.நாகராசன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கோபால், பாலக்கோடு பேரூராட்சி முன்னாள் துனைத் தலைவர் சங்கர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜினா செந்தில், நித்யா சண்முகம் பாலக்கோடு தாசில்தார் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கெளரி, தனபால் மற்றும் அரசு அலுவல்களும் அங்கன்வாடி ஊழியர்களும் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.