17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி – நள்ளிரவில் படம் பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் மீது லாரி மோதியது.இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிாிழப்பு

உசிலம்பட்டி – நள்ளிரவில் படம் பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் மீது லாரி மோதியது.இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிாிழப்பு

எழுதியவர்: mohan September 28, 2019, 12:50 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருணாசலம்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் (22) முகமது கனி (20) சுருளிகுமார் (18) நண்பர்கள் மூன்று பேரும் நேற்று (27.09.19) நள்ளிரவு உசிலம்பட்டி கீழப்புதூரிலுள்ள தியேட்டரில் சிவகார்த்திகேயன் நடித்த நம்மவீட்டுப்பிள்ளை படம் பார்த்துள்ளனர்.படம் முடிந்து 3 பேரும் ஒரே வண்டியில் வீடு திரும்பியுள்ளனர்.இரு சக்கரவாகனம் மதுரை ரோடு பழைய தாலுகா அலுவலகம் அருகே வரும் போது தேனியிலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி இவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.இதில் படுகாயமடைந்த மூவரும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அதில் இன்று காலை (28.09.19) ஜெயராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மற்ற இருவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்;பட்டு வருகிறது.இச்சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!