18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கிராமசபை விழிப்புணர்வு பிரச்சாரம்

கிராமசபை விழிப்புணர்வு பிரச்சாரம்

எழுதியவர்: mohan September 28, 2019, 12:00 pm

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக இராஜசிங்கமங்கலம் ஒன்றியம் தும்படைக்கா கோட்டை ஊராட்சியில் கிராம சபை விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. கிராமசபையின் அவசியத்தை பற்றியும், நமது கிராமங்களுக்கு தேவையானவற்றை எப்படி தீர்மானமாக நிறைவேற்றுவது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் தும்படைக்கா கோட்டை கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வரும் அக்டோபர்-2 அன்று நடைபெறும் கிராமசபையில் கட்டாயம் கலந்துகொள்வோம் என உறுதியளித்தனர். அக்டோபர்-2 கிராம சபைக்கு முன்பு மாதிரி கிராம சபையை முன்னெடுக்க இளைஞர்களிடம் வலியுறுத்தப்பட்டது.  இந்த ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட திட்ட வளர்ச்சிகள் குறித்தும் , வரவு -செலவு கணக்குகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பரப்புரையில் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன், இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!