18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல். இருவர் கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல். இருவர் கைது

எழுதியவர்: mohan September 28, 2019, 11:12 am

இராமநாதபுரம் பாம்பன் குந்துக்கால் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்பட உள்ளதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து குந்துகால் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நள்ளிரவு 1மணியளவில் குந்துகால் விவேகானந்தர் மண்டபம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற இருவரை போலீசாரை கண்டதும் கையில் வைத்திருந்த பண்டலை கடலில் வீசிவிட்டு தப்ப முயன்றனர். கடலில் வீசிய பண்டலை கைப்பற்றினர். அதனை பிரித்து சோதனை செய்ததில் 16 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. இதையடுத்து தப்பியோடிய இராமேஸ்வரம் ரவி பிரசாத், கலையரசன் ஆகியோரை பிடித்து பாம்பன் போலீசில் வைத்து விசாரிக்கின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!