18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமேஸ்வரத்தில் மஹாளய அமாவாசை ஆயிரக்கணக்கனோர் புனித நீராடினர்

ராமேஸ்வரத்தில் மஹாளய அமாவாசை ஆயிரக்கணக்கனோர் புனித நீராடினர்

எழுதியவர்: mohan September 28, 2019, 11:06 am

இராமேஸ்வரத்தில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் வட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று27.09.19 இரவு முதல் குவிந்தனர். அக்னிதீர்த்தக் கடலில் அரிசி மாவு பிண்டம், எள் வைத்து தர்ப்பணம் பூஜைகள் செய்து முன்னோர்களை  அதிகாலை வழிபட்டனர். கூட்ட நெரிசலால் தரிசனம் செய்ய 3 மணி நேரம் தாமதம் ஏற்பட்டதாக பக்தர்கள் கூறினர். நகராட்சி ஆணையர் வீர முத்துகுமார் தலைமையில் பணியாளர்கள் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்தனர். இதனால் குழந்தைகள், முதியோர்கள் சிரமம் இன்றி அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். கோயிலின் நான்கு ரத வீதிகள், அக்னி தீர்த்தக்கடல் மற்றும் மக்கள் நெரிசலான பகுதிகளில் தென் மாவட்ட மாவட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தபட்டது. கோயில் நுழைவு வாயிலில் மோப்ப நாய், வெடி குண்டு நிபுணர்கள் கோயிலுக்கு வந்த பக்தர்களின் உடமைகள் சோதனை செய்த பின் தரிசனத்திற்கு அனுமதிக்கப் பட்டனர். சாலைகள், தெருக்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்களின் அன்றாட பணிகள் பாதித்தது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் வருகையால் ராமேஸ்வரம் கூட்ட நெரிசலில் சிக்கியது. 2 கி.மீ., தூரம் வரை வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் வெளியூர், பக்தர்கள், உள்ளுர் வாசிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!