17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளி மாணவியை எாித்துக் கொன்றவனுக்கு ஆயுள் தண்டனை.

பள்ளி மாணவியை எாித்துக் கொன்றவனுக்கு ஆயுள் தண்டனை.

எழுதியவர்: mohan September 27, 2019, 6:27 pm

திருமங்கலம் தாலுகா காவல் நிலைய எல்கையில் உள்ள நடுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன்(29) ,இவன் 9-ம் வகுப்பு படித்த வந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். இதை மாணவி மறுத்து வந்த நிலையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பாலமுருகன் மீது 2017ல் போக்சோ சட்டப்படி திருமங்கலம் மகளிர் போலீசில் வழக்கு பதியப்பட்டது. போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு மதுரை சிறையில் இருந்தான்.அவன் ஜாமீனில் வந்த போது 2018ல் பள்ளி முடித்து மாணவி வீடு திரும்பும் வழியில் பாலமுருகன், மாணவியை வழிமறித்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்தான். இதில் மாணவி தீயில் எரிந்து பலியானார். திருமங்கலம் தாலுகா போலீசார் பாலமுருகனை கைது செய்து  வழக்குப்பதிவு செய்து வழக்கை நீதிமன்றத்தில் நடத்தி வந்தனர். இதன் பேரில் மதுரை மகளிர் நீதிமன்றம், குற்றவாளி பாலமுருகனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் Rs.5000/- தீர்ப்பளித்து உத்தரவிட்டது. இதை அறிந்த மாணவியின் பெற்றோர்,உறவினர் மற்றும் மக்கள் வழக்கு விசாரணையை நீதிமன்றத்தில் வெற்றிகரமாக நடத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று கொடுத்த விசாரணை அதிகாரி மற்றும் நீதிமன்ற போலீசாரை வெகுவாக பாராட்டினர்

.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!