17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிதிலமடைந்த நிலையில்.. உயிருக்கு அச்சுறுத்தலாக… கழிவுகள் கொட்டுமிடமாக..தனியார் பேனர்களுடன் காட்சியளிக்கும் கீழக்கரை பேருந்து நிலையம்…

சிதிலமடைந்த நிலையில்.. உயிருக்கு அச்சுறுத்தலாக… கழிவுகள் கொட்டுமிடமாக..தனியார் பேனர்களுடன் காட்சியளிக்கும் கீழக்கரை பேருந்து நிலையம்…

எழுதியவர்: ஆசிரியர் September 27, 2019, 4:29 pm

கீழக்கரை “தாலுகா”… கேட்க கம்பீரமாக இருக்கும், ஆனால் மக்களின் தேவையை கவனத்தில் கொள்ளாத நகராட்சி நிர்வாகத்தால் சுகாதாரக்கேடு, சாக்கடைகள், மக்களுக்கு இடையூராக இருக்கும் மதுக்கடைகள், உயிருக்கு அச்சுறுத்தலாக தெருக்களில் உலா வரும் வெறி நாய்கள் என அடுக்கி கொண்டே போகலாம். இவை அனைத்தையும் எதிர்த்து போராட்டங்களும், மனுக்களும் அளித்தாலும் கிடைக்கும் ஒரே பதில் “விரைவில் தீர்வு காணப்படும்”.  ஆண்டுகள் பல கடந்தாலும் அதே வார்த்தையை பின்பற்றும் வாக்கு மாறாத நகராட்சி நிர்வாகம்.

அதன் வரிசையில் பல வருடங்களாக தீர்க்கப்படாத ஒரு பிரச்சினைதான் கீழக்கரையில் இருக்கும் சிதிலமடைந்த பேருந்து நிலையம், அங்கு கொட்டப்படும் மாமிச கழிவுகள், அதற்கு மேலாக சமீபத்தில் நீதிமன்றத்தால் அகற்ற உத்தரவிடப்பட்ட ஃப்ளக்ஸ் பேனர்கள், இன்று வரை அகற்றப்படாமல் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையிலேயே உள்ளது.

இது சம்பந்தமாக இன்று (27/09/2019) தேசிய தலைவர் மனிதநேய அறக்கட்டளை சார்பாக மனு கொடுக்கப்பட்டுள்ளது.  மீண்டும் அதே பதில் “விரைவில் தீர்வு காணப்படும்”.  பொறுத்திருந்து பார்ப்போம்.

தகவல் உதவி:- கீழை பிரபாகர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!